/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
/
குளித்தலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
ADDED : மார் 07, 2024 06:43 AM
குளித்தலை : குளித்தலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
குளித்தலை காந்திசிலை எதிரில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் வைப்பதற்காகவும், ஆக்கிரமிப்பு பகுதிகளையும் நேற்று காலை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமையில், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், ஆர்.ஐ., சேகர் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
மூன்று உணவகங்கள், போட்டோ ஸ்டுடியோ, மளிகை கடை, ஆயில் கடை, டைலரிங் கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை, ஆர்.டி.ஓ., ரவி, தாசில்தார் சுரேஷ் பார்வையிட்டனர்.
நகராட்சி கமிஷனர் நந்தகுமார் கூறுகையில்,'' நகராட்சி பகுதியில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறேன், ஆக்கிரமிப்புகள் அனைத்து பகுதியிலும் படிப்படியாக அகற்றப்படும்,'' என்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சாலை பணியாளர்கள், நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

