/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவிலில் பிரதிஷ்டை விழா
/
நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவிலில் பிரதிஷ்டை விழா
ADDED : நவ 05, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதிஷ்டை விழா
பள்ளிப்பாளையம், நவ. 5-
பள்ளிப்பாளையம் அருகே, வசந்த நகர் பகுதி யில் காவிரி ஆற்றோரம் நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலின், 8ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, கணபதி, கருட, தன் வந்தரி, மஹாலட்சமி உள்ளிட்ட சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

