/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரெங்கநாதபுரம் வாய்க்கால் மதகில் இருந்த ஷட்டர் அகற்றம் கழிவுநீரால் சாகுபடி பாதிப்பு என கலெக்டரிடம் புகார்

ADDED : அக் 15, 2024 03:05 AM
ரெங்கநாதபுரம் வாய்க்கால் மதகில் இருந்த ஷட்டர் அகற்றம்
கழிவுநீரால் சாகுபடி பாதிப்பு என கலெக்டரிடம் புகார்
கரூர், அக். 15--
ரெங்கநாதபுரம் அருகில் உள்ள மதகிலிருந்த ஷட்டர் அகற்றப்பட்டதால், அதன் வழியாக கழிவுநீர் வருவதால் சாகுபடி பாதிக்கப்படுகிறது என, ரெங்கநாதபுரம் வடக்கு பகுதி விவசாயிகள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் மாயனுார் கதவணையில் பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் சாகுபடி நடந்து வருகிறது. அதில் ரெங்கநாதபுரம் அருகில் உள்ள மதகு வழியாக செல்லும் தண்ணீர் பயன்படுத்தி, 100 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது.
இந்த மதகில் இருந்த ஷட்டர்கள் சேதமடைந்து விட்டதால், அவை அகற்றப்பட்டு விட்டன. இதனால், கழிவுகள் கலந்த தண்ணீர் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வருகிறது. பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக ஷட்டரை பொருத்த நீர்வளதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.