/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிவாரண முகாம்களில் தேவையான வசதி கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
/
நிவாரண முகாம்களில் தேவையான வசதி கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
நிவாரண முகாம்களில் தேவையான வசதி கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
நிவாரண முகாம்களில் தேவையான வசதி கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2024 01:14 AM
நிவாரண முகாம்களில் தேவையான வசதி
கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
கரூர், அக். 4-
''வெள்ள சேதங்கள் ஏற்படும் பகுதிகளில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும்,'' என, கலெக்டர்
தங்கவேல் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
மாவட்டத்திலுள்ள மழைமானி நிலையங்களை, ஆர்.டி.ஓ.,க்கள் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். தாசில்தார்கள் மழை அளவு, இதர சேதங்கள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நாளும் காலை, 7.00 மணிக்குள் மாவட்ட அலுவலர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் தவறாமல் தெரிவிக்க வேண்டும். வெள்ள சேதங்கள் ஏற்படும் பகுதிகளில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி, அத்தியாவசிய வசதிகளை தயார்
நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கல்யாண மண்டபங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மக்கள் நல அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பு குழு, சமுதாய நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனம், மனமகிழ் மன்றம் போன்ற அமைப்புகள் மற்றும் பிற பொதுநல அமைப்புகளையும் தொடர்பு கொண்டு, அதன் பட்டியல், தொலைபேசி எண்களை அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் பொக்லைன், புல்டோசர், கனரக வாகனங்கள் மற்றும் தேவையான மீட்பு பணி உபகரணங்களை வைத்துள்ளவர்களின் பட்டியல், காஸ் முகவர்கள், களப்பணியாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், சமுதாய கூடங்களின் பட்டியலை தொலைபேசி எண்ணுடன் தயார் செய்து கொள்ளவும். போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், கலெக்டர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையும், ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தடையற்ற மின் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்ய அவசியம்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

