தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 11, 2024 12:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, சிறுபாலத்தின் இணைப்பு சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, மண் மங்கலம் பிரிவில் இருந்து, வாங்கல் பகுதிக்கு தார் சாலை செல்கிறது. 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக செல்கிறது. அந்த தார் சாலையில், குடுகுடுத்தானுார் பகுதியில், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சிறு பாலம் கட்டப்பட்டு மற்றும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், தரமற்ற சிமென்ட் ஜல்லிகற்கள் கலவையால், இணைப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், இந்த வழியாக செல்கிறது.

சேதம் அடைந்த இணைப்பு சாலைகளில், பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், குண்டும், குழியுமாக உள்ள, சாலைகளில் விழுந்து காயமடைகின்றனர்.

இதனால், மண் மங்கலம்-வாங்கல் சாலையில் குடுகுடுத்தானுார் பகுதியில் சேதமடைந்த, சிறுபாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க, நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us