/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செயல் அலுவலர், உதவியாளர் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் கைது
/
செயல் அலுவலர், உதவியாளர் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் கைது
செயல் அலுவலர், உதவியாளர் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் கைது
செயல் அலுவலர், உதவியாளர் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : அக் 09, 2024 06:31 AM
கரூர்: கரூர் அருகே, கோவில் செயல் அலுவலர், உதவியாளரை தாக்கியதாக, முன்னாள் ராணுவ வீரரை, போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெண்ணை மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள நிலங்களை ஆய்வு செய்யும் பணியில், திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஹரினி, உதவி ஆணையர் ரமணி காந்தன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள், சர்வேயர்கள், சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செந்தில் குமார், 40, என்பவர், திருப்பூர் அமண லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அமரநாதன், உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோரை, தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார்.இதுகுறித்து, உதவியாளர் கோவிந்தராஜ் கொடுத்த புகார்படி, முன்னாள் ராணுவ வீரர் செந்தில் குமாரை, வெங்கமேடு போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். இதனால், கரூர் வெண்ணைமலை சுப்பிரமணிய புரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.