/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை
/
கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை
கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை
கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 21, 2025 08:17 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 403 முழுநேரம், 233 பகுதி நேரம் என, மொத்தம், 636 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 3 லட்சத்து, 37,531 அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும், 5,264.31 மெட்ரிக் டன் இலவச அரிசியும், 435.072 மெட்ரிக் டன் சர்க்கரை, 132.934 மெட்ரிக் டன் கோதுமை, 24,000 லிட்டர் மண்ணெண்ணெய், 281.532 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 2,85,934 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதில், அரிசியை தவிர மீதமுள்ள பொருட்களை விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். அரசு தரப்பில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை, 60 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் கணக்கில் வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் இலவச அரிசியை இடைத்தரகர்கள் மூலம் மாதந்தோறும் கோழிப்பண்ணை மற்றும் மாடுகள் பண்ணைக்கும், இலவச அரிசி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் நேரடியாக வாங்குவது மட்டுமல்லாது, வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, வாங்கப்படும் ரேஷன் அரிசி, இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக கோழிப்பண்ணைக்காக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும், கரூர் மாவட்ட நிர்வாகம் சோதனை நடத்தி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

