/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்
/
முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்
ADDED : ஆக 13, 2024 06:11 AM
கரூர்: கிருஷ்ணராயபுரம், மேளக்கார தெருவை சேர்ந்த அமிர்தா-னந்தம் என்பவர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து மீது, முறைகேடு தொடர்பாக மனு அளித்ததற்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி, முகத்தில் கரியை பூசி கொண்டு மனு கொடுக்க வந்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து வருகிறேன். ஆத்திரம-டைந்த கும்பல், என்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்-ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, விசாரணை முறையாக நடந்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

