/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடவூரில் தி,மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
/
கடவூரில் தி,மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : மார் 09, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலர் சுதாகர் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநில கொள்கைபரப்பு துணை செயலர் கரூர் முரளி ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். வரும் எம்.பி.,தேர்தலின் போது தி.மு.க., ஆட்சி காலங்களில், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு செய்து வரும் சாதனைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ள மக்களின் நலத்திட்ட பணிகள் குறித்து நிர்வாகிகள், மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

