/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் தவறி விழுந்து கல்லுாரி மாணவி பலி
/
கிணற்றில் தவறி விழுந்து கல்லுாரி மாணவி பலி
ADDED : ஏப் 08, 2024 07:26 AM
மல்லசமுத்திரம்: பள்ளக்குழி அக்ரஹாரம் கிராமத்தில், விவசாய கிணற்றில் மோட்டார் போட சென்ற கல்லுாரி மாணவி கல் தடுக்கியதில் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.மல்லசமுத்திரம் ஒன்றியம், பள்ளக்குழி அக்ரஹாரம் கிராமம், நத்தமேட்டார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 45; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர்.
இவரது இரண்டாவது மகள் கோகிலா, 20. சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில், பயிர்களுக்கு தண்ணீர் எடுத்துவிட மோட்டார் அறை அருகே சென்றார். அப்போது, கல்தடுக்கியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கோகிலாவை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கோகிலோ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

