/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் 654 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
/
குளித்தலையில் 654 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
குளித்தலையில் 654 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
குளித்தலையில் 654 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
ADDED : மார் 06, 2024 06:31 AM
குளித்தலை : குளித்தலையில் நேற்று, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில், முதல் கட்டமாக வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகித்தார்.நகராட்சி தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.
தாசில்தார் சுரேஷ் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.இந்த திட்டத்தில் கழுகூர், வைகைநல்லுார் கிராமத்தில், 654 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். மண்டல தாசில்தார் சித்ரா, ஆர்.ஐ.,க்கள் காளிமுத்து, பானுமதி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் பணியாளர்கள், பயனாளிகள், தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.