/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 54 வேட்பாளர்கள் போட்டி கூடுதலாக 3,132 ஓட்டுப்பதிவு இயந்திரம்
/
கரூரில் 54 வேட்பாளர்கள் போட்டி கூடுதலாக 3,132 ஓட்டுப்பதிவு இயந்திரம்
கரூரில் 54 வேட்பாளர்கள் போட்டி கூடுதலாக 3,132 ஓட்டுப்பதிவு இயந்திரம்
கரூரில் 54 வேட்பாளர்கள் போட்டி கூடுதலாக 3,132 ஓட்டுப்பதிவு இயந்திரம்
ADDED : ஏப் 01, 2024 03:37 AM
கரூர்: கரூர் லோக்சபா தொகுதியில், 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக, 3,132 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எந்தெந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் கணினி முறையிலான முதல்கட்ட குலுக்கல் நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், 1,051 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. அதில், 5,135 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக கணினி முறையிலான குலுக்கல் நடத்தப்பட்டது. அதில், 1,260 கட்டுப்பாட்டு இயந்திரம், 1,260 ஓட்டுப்பதிவு இயந்திரம், 1,365 வாக்காளார் தங்கள் அளித்த ஓட்டுகளை சரிபார்க்கும் இயந்திரம் சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 54 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அதற்காக மேலும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் கூடுதலாக, 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில், 3,132 ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறுப்பு அலுவலர் இளங்கோ, தேர்தல் தாசில்தார் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

