/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது:கலெக்டர்
/
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது:கலெக்டர்
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது:கலெக்டர்
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது:கலெக்டர்
ADDED : மே 20, 2024 01:48 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 8 பஞ்சாயத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
சீமை கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான, மாவட்ட அளவிலான குழுக்கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவுபடி, கரூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு, ஒரு கிராம பஞ்., வீதம் எட்டு பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்.,ல் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள சீமை கருவேல் மரங்களை முழுவதும் அனைத்து துறையினரும் இணைந்து அகற்றிட வேண்டும். சமூக தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும். சீமை கருவேல் மரங்கள் அகற்றப்படும் இடங்களில், புதியதாக மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு நன்கு பராமரிக்க வேண்டும். இதன் மூலம் சீமை கருவேல் மரங்கள் மீண்டும் வளர்வதை தடுக்க முடியும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது)
தண்டாயுதபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்செல்வன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், பாகனத்தம் வெடிக்காரன்பட்டி குளத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணியை கலெக்டர் தங்க வேல் பார்வையிட்டார்.

