/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துவங்கியது முருங்கைக்காய் சீசன் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை
/
துவங்கியது முருங்கைக்காய் சீசன் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை
துவங்கியது முருங்கைக்காய் சீசன் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை
துவங்கியது முருங்கைக்காய் சீசன் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை
ADDED : ஏப் 07, 2024 01:39 AM
கரூர்,:கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்தாண்டு இறுதியில் எதிர்பார்த்த மழை பெய்ததால், கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் முருங்கைக்காய் சாகுபடியை விவசாயிகள் துவக்கினர்.
வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை, முருங்கை சீசன் காலமாகும். இந்நிலையில், கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வரத்து, ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தை விட, தற்போது முருங்கை விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
வியாபாரிகள் கூறியதாவது:
அரவக்குறிச்சி வட்டாரத்தில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. தற்போது சீசன் காலத்தையொட்டி முருங்கைக்காய் வரத்து அதிகரித்து ஒரு கிலோ, 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரத்து அதிகரிப்பால், முருங்கைக்காய் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறினர்.