/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
/
கிருஷ்ணராயபுரம் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2024 03:16 AM
கிருஷ்ணராயபுரம்: தமிழ் புத்தாண்டையொட்டி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகே உள்ள முருகன் கோவிலில், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. பின், பாலதண்டாயுதபாணி முருகனுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கருப்பத்துார் ஐயப்பன் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* குளித்தலை கடம்பவனேஸ்வரர், மாரியம்மன், பேராளகுந்தாலம்மன், பாலதண்டாயுதபாணி, ஐயப்பன், நீலமேகபெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களில் பக்தர்கள், பொது மக்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட குடிபாட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.