/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி படுகையில் மரக்கன்றுகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
/
காவிரி படுகையில் மரக்கன்றுகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
காவிரி படுகையில் மரக்கன்றுகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
காவிரி படுகையில் மரக்கன்றுகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
ADDED : மே 17, 2024 01:50 AM
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்துார், காவிரி படுகையில் நடப்பட்டுள்ள பல வகையான பழமரக்கன்றுகள் வளர்ச்சி குறித்து, கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து கருப்பத்துார் சிவன் கோவில் காவிரி கரை படுகையில், 1,500க்கும் மேற்பட்ட பல வகையான பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நெல்லி, நாவல், தேக்கு, பூவரசம் உள்பட பல்வேறு மரக்கன்றுகள் கடந்த சில ஆண்டுகள் முன்பு நடப்பட்டது. நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது. தற்போது கன்றுகள் வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்து வருகிறது. பசுமை சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், செயல்படுத்தப்பட்டுள்ள திட்ட பணிகளை, கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். கருப்பத்துாரில் தற்போதுள்ள மரக்கன்றுகள், பழ மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், யூனியன் பொறியாளர்கள் சிவக்குமார், மைதிலி, ஒவர்சியர்ஸ் பத்மா, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சக்திவேல், செயலாளர் சிதம்பரம் உள்பட கலந்து கொண்டனர்.

