/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடுப்பு எடுக்காமல் வந்த 2 மாணவிகளுக்கு பரிசு
/
விடுப்பு எடுக்காமல் வந்த 2 மாணவிகளுக்கு பரிசு
ADDED : ஏப் 25, 2024 04:34 AM
கரூர்: அரசு பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த அரசு பள்ளி மாணவிகளுக்கு, வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்பட்டது.
கரூர் தான்தோன்றிமலை ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் இருபெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை வகித்தார். 2023--24ம் கல்வி ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, சிறந்த மாணவர் விருதை முதல் வகுப்பு ரித்திகா, இரண்டாம் வகுப்பு ருத்ரா, மூன்றாம் வகுப்பு தன்சிகா, நான்காம் வகுப்பு சபிதா, ஐந்தாம் வகுப்பு மிருதுளா ஆகியோர் பெற்றனர்.
இந்த கல்வியாண்டில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்தவருக்கு, 10 கிராம் வெள்ளி நாணயத்தை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மிருதுளா, தீனாஸ்ரீ ஆகியோருக்கு, கரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் வழங்கினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தான்தோன்றிமலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

