/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோகனுாருக்கு ரூ.24 கோடியில் தனிக்குடிநீர் திட்டம்; எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
/
மோகனுாருக்கு ரூ.24 கோடியில் தனிக்குடிநீர் திட்டம்; எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
மோகனுாருக்கு ரூ.24 கோடியில் தனிக்குடிநீர் திட்டம்; எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
மோகனுாருக்கு ரூ.24 கோடியில் தனிக்குடிநீர் திட்டம்; எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
ADDED : ஏப் 05, 2024 04:46 AM
மோகனூர்: மோகனுாருக்கு, 24 கோடி ரூபாயில் தனிக்குடிநீர் திட்டப்
பணிகள் நடைபெறுவதாக எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், இண்டியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு, கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ராஜேஸ்குமார் எம்.பி., பேசியதாவது: மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் நிலவி வந்த, குடிநீர் பிரச்னையை கருத்தில் கொண்டு பொது மக்களின் கோரிக்கையை ஏற்று நானும், அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் முதல்வரிடம் எடுத்துரைத்தோம். இதனை உடனே பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அம்ரூத், 2.0 திட்டத்தின் கீழ் தனிகுடிநீர் திட்டம், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை,
காமராஜர், கருணாநிதிக்கு பிறகு ஏழை எளிய மக்களின் குழந்தைகள் காலையில் பள்ளிக்கு பசியோடு போகக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு, முதல்வர் அவர்கள் இந்தியாவே போற்றும் வகையில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும், தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்த, உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்.
இவ்வாறு பேசினார்.
ஒன்றிய செயலாளர் நவலடி தலைமையில், பேரூர் செயலாளர் செல்லவேல் முன்னிலையில், பேரூர் மன்ற தலைவர் வனிதா மோகன், துணை தலைவர் சரவணன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் உடையவர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

