/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை
/
குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை
குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை
குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை
ADDED : செப் 09, 2024 07:32 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சியில், தற்காலிக வாரச்சந்தை என்ற பெயரில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் மதியம் முதல் இரவு வரை, காவிரி நகர், கிளை நுாலகம், உழவர் சந்தை, அண்ணா நகர், சிறுவர் பூங்கா ஆகிய தார்ச்சாலையில் வியாபாரிகள், விவசாயிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாரச்சந்தையால், இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகம், தனியார் மருத்துவமனை, தனியார் நிறுவனங்கள், சமுதாய மன்றம் ஆகியவகைக்கு வந்துச்செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த வாரச்சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும் வகையில் வாரச்சந்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடம்பவனேஸ்வரர் கோவில் வெளிபிரகாரம், சுற்றுச்சுவர் பகுதியில் வாரச்சந்தை நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.