/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் கிடந்த பணம்: அரசு அதிகாரி கண்டுபிடிப்பு
/
சாலையோரம் கிடந்த பணம்: அரசு அதிகாரி கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 20, 2024 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே சாலையில் கிடந்த, பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர் கைப்பற்றினார்.
கரூர் மாவட்ட, விவசாய துறை அலுவலகத்தில், துணை பொறியாளராக இருப்பவர் கலைச்செல்வி, 45; இவர், தற்போது கரூர் லோக்சபா தொகுதி, பறக்கும் படை அலுவலராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். கடந்த, 17 இரவு கலைச்செல்வி, வெங்கமேடு நவீன் நகரில் ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் சாலையோரத்தில், 46 ஆயிரம் ரூபாய் கிடந்தது. அதை கைப்பற்றிய கலைச்செல்வி, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை சாலையில் வீசியவரை தேடி வருகின்றனர்.

