/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுத்திருக்காம்புலியூரில் பாலம் கட்டும் பணி தீவிரம்
/
மேட்டுத்திருக்காம்புலியூரில் பாலம் கட்டும் பணி தீவிரம்
மேட்டுத்திருக்காம்புலியூரில் பாலம் கட்டும் பணி தீவிரம்
மேட்டுத்திருக்காம்புலியூரில் பாலம் கட்டும் பணி தீவிரம்
ADDED : ஏப் 07, 2024 03:47 AM
கிருஷ்ணராயபுரம்: மேட்டுத்திருக்காம்புலியூரில், கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் கட்டும் பணி துரிதமாக நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் நடுவில் பழமையான பாலம் இருந்தது. பாலம் வழியாக வாகனங்களில் மக்கள் சென்று வந்தனர். பாலத்தின் பல இடங்களில், விரிசல் ஏற்பட்டதால் பழமையான பாலம் அகற்றப்பட்டது. தற்போது பழமையான பாலம் அருகில், புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக வாய்க்கால் நடுவில், பொக்லைன் இயந்திரம் கொண்டு குழிகள் பறிக்கப்பட்டு, சிமென்ட் கலவை கொண்டு புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது துாண்கள் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சில மாதங்களில், பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும். இப்பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.