/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் தவிப்பு
/
சாலையில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் தவிப்பு
ADDED : மே 20, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், அரசு காலனியில் சாலையோரம் குவியும் குப்பையால் சுகாதாரகேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கரூர் அருகில் வாங்கம்பாளையம் முதல், அரசு காலனி வரையிலான சாலையோரம் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளன. நகராட்சி சார்பில் குப்பை கொட்டக்கூடாது என
விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆங்காங்கே கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையோரம் வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பையை சாலையோரம் எரிக்கும் நிகழ்வுகளை கண்டறிந்து, தேவையான நடவடிக்கைளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

