/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பறிமுதல் விநாயகர் சிலைகள் கோவில்களில் வைக்க கோரிக்கை
/
பறிமுதல் விநாயகர் சிலைகள் கோவில்களில் வைக்க கோரிக்கை
பறிமுதல் விநாயகர் சிலைகள் கோவில்களில் வைக்க கோரிக்கை
பறிமுதல் விநாயகர் சிலைகள் கோவில்களில் வைக்க கோரிக்கை
ADDED : செப் 16, 2024 03:22 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில், இரண்டு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலை வைக்கப்பட்டது.
போலீசார் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டதால், அந்த இரண்டு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், கருங்களாப்பள்ளி, பங்களாப்புதுார், பள்ளி வாசல் தெருவில் வைக்கப்பட்ட, ஐந்து விநாயகர் சிலைகளை, இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலக நுழைவாயிலில் உள்ள தரைதளத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளளது.தாலுகா அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்லும் பொதுமக்கள் மத்தியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை ஆற்றில் கரைக்க வேண்டும், இல்லையெனில் பாதுகாப்புடன் கோவிலில் வைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.