/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற காவிரி படுகை விவசாயிகள் கோரிக்கை
/
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற காவிரி படுகை விவசாயிகள் கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற காவிரி படுகை விவசாயிகள் கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற காவிரி படுகை விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 07, 2024 03:46 AM
குளித்தலை: மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக பெரம்பலுார் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும். குளித்தலை - முசிறி காவிரி ஆற்றின் மீது பெரியார் பாலம் அருகே, புதிய பாலம் அமைக்க வேண்டும் என, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து, கூட்டமைப்பு தலைவர் வளையபட்டி ஜெயராமன் கூறியதாவது:
தமிழகத்தில் குளித்தலை சட்டசபை தொகுதி, 1957ல் மறைந்த முதல்வர் கருணாநிதி முதல் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இன்று வரை பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது. எந்த தொழில் வளர்ச்சியும், விவசாய முன்னேற்றமும் அடையவில்லை, தொகுதியில் வறட்சி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, குளித்தலை தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைய, நடப்பு நிதியாண்டில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். அதாவது மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக பெரம்பலுார் செல்லும், 110 கி.மீ., நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக நான்கு வழி சாலையாக மாற்றினால், அந்த சாலை மணப்பாறை அருகே திருச்சி. மதுரை, திண்டுக்கல். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும்.
அதேபோல், பெரம்பலூரில் இணைத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும். இந்த புதிய நான்கு வழிச்சாலை அமையும் பட்சத்தில், குளித்தலை - முசிறி இடையே காவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரியார் பாலம் மிகவும் பழமையானதாக உள்ளது. அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டி, நான்கு வழிச்சாலையாக பயன்படுத்தினால், முசிறி, குளித்தலை சட்டசபை தொகுதிகள் வளர்ச்சி அடைந்தவையாக மாறும். எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மணப்பாறை - பெரம்பலுார் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

