/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தால் பெண்கள் கஷ்டம் தீர்ந்தது பா.ஜ., வானதி சீனிவாசன் பெருமிதம்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தால் பெண்கள் கஷ்டம் தீர்ந்தது பா.ஜ., வானதி சீனிவாசன் பெருமிதம்
'ஜல் ஜீவன்' திட்டத்தால் பெண்கள் கஷ்டம் தீர்ந்தது பா.ஜ., வானதி சீனிவாசன் பெருமிதம்
'ஜல் ஜீவன்' திட்டத்தால் பெண்கள் கஷ்டம் தீர்ந்தது பா.ஜ., வானதி சீனிவாசன் பெருமிதம்
ADDED : ஏப் 15, 2024 03:11 AM
கரூர்: ''பா.ஜ.,வின் ஜல் ஜீவன் திட்டத்தால் பெண்கள் கஷ்டம் தீர்ந்தது,'' என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில், கரூர் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறி தைரியமாக ஓட்டு கேட்கும் கூட்டணி, பா.ஜ., மட்டும் தான். மற்ற கூட்டணிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெறுவர். அது நிச்சயம். தமிழகத்தில், எம்.பி.,க்களே இல்லாவிட்டாலும் பிரதமரின் அனைவருக்கும் வீடு, ஜல்ஜீவன், அனைத்து இல்லங்களிலும் கழிப்பறை போன்ற பல்வேறு நலத்திட்டங்களால், தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்.
பெண்கள் சிரமப்பட கூடாது என்பதற்காக, இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. வாங்கி கணக்கு தொடங்கப்பட்டதால், நேரடியாக சிலிண்டர் மானியமும், விவசாய மானியமும் எந்த ஒரு இடைத்தரகர்களும் இல்லாமல் வந்து சேர்கிறது. அதற்கு காரணம் பிரதமர் மோடி. ஒவ்வொரு தெருவிலும் டாஸ்மாக் கடையை திறந்ததால், தற்போது மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு மாறாக, ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு தந்து பெண்கள் கஷ்டத்தை போக்கிய அரசாக, பா.ஜ., உள்ளது.
கொலுசு, ஹாட் பாக்ஸ் கொடுத்து ஜெயித்தவர், இப்போது ஜெயிலில் இருக்கிறார். மத்திய அரசு நிதிகள் தரவில்லை என்று தொடர்ச்சியாக கூறியே, தாத்தா, அப்பா, பேரன் என தொடர்ந்து ஊழல் செய்து வருகின்றனர். பா.ஜ.,வில் உழை க்கும் தொண்டர்கள் எளிதாக முன்னுக்கு வர முடியும். ஆனால், தி.மு.க., வில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மகளிர் அணி மாநில துணைத் தலைவர் மீனா வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

