/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பேச்சு
/
பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பேச்சு
பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பேச்சு
பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் பேச்சு
ADDED : ஏப் 07, 2024 03:12 AM
கரூர்: மத்திய பா.ஜ., அரசின், பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில், 140 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை தந்து உயிரை காத்தவர் பிரதமர் மோடி. இது உள்ளாட்சி தேர்தலோ, முதல்வரை தேர்வு செய்யும் சட்டசபை தேர்தலோ அல்ல. மாறாக இந்தியாவை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று, பிரதமரை தேர்வு செய்யக்கூடிய தேர்தல். இதில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவது உறுதி.
நான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டால், மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவேன். மற்ற வேட்பாளர்களை போல் பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டேன். மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வந்தது. அதற்காக மேம்பாலம் கட்டுவதில் பல பிரச்னைகள் இருந்தது. அதையெல்லாம் சரி செய்து, மத்திய அரச சார்பில் பாலம் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், மருத்தவ காப்பீடு திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீர் என்று பல நல்ல திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. தி.மு.க., அரசு மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதாக கூறி விட்டு பாதி பேருக்கு தரவில்லை. கடந்த, 50 ஆண்டு காலமாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் பணத்தை கொடுத்தால், மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்கள். எனவே, எதிர்கால சமுதாயத்திற்கான மாற்றம் வேண்டும் என, ஓட்டு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, மாநில மருத்துவ பிரிவு செயலாளர் அரவிந்த் கார்த்திக், மகளிர் அணி மாநில துணைத் தலைவர் மீனா, பா.ம.க., மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

