/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ.,வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு:மாநில துணைத்தலைவர் தகவல்
/
பா.ஜ.,வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு:மாநில துணைத்தலைவர் தகவல்
பா.ஜ.,வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு:மாநில துணைத்தலைவர் தகவல்
பா.ஜ.,வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு:மாநில துணைத்தலைவர் தகவல்
ADDED : செப் 04, 2024 03:03 AM
கரூர்;'' தமிழகத்தில், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, மாநில பா.ஜ., துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த, ராமலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளது. இன்று (நேற்று) காலை, 8:00 மணி வரை, மூன்று லட்சத்து, 80 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 17ம் தேதி உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு, தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடங்கும். தமிழகத்தில், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, அமைப்பு தேர்தல் நடைபெறும். தேசிய கல்வி கொள்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கையில், ஹிந்தி கட்டாயம் இல்லை. தேர்வு மொழி பிரிவில், விரும்பும் மொழியை கற்கலாம். குறிப்பாக, தமிழகத்தில் அருந்ததியர், ரெட்டியார், நாயுடு ஆகியோருக்கு தெலுங்கு தாய் மொழியாக உள்ளது. அதே போல், தேவாங்கு செட்டியாருக்கு கன்னடம் தாய் மொழியாக உள்ளது.அதேபோல், தமிழக எல்லை பகுதியில் வசிப்பவர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய கல்வி கொள்கையை, முன்னாள் முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார். கருணாநிதி குடும்பத்தினர் கூட, தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் என, பேசப்படுகிறது. புதிய கல்வி கொள்கை குறித்து, தமிழகத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், அவரது எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான், அவரது தகுதியை தெரிந்து கொள்ள முடியும். கரூரை பொறுத்தவரை, எவ்வளவு புகார் வந்தாலும், தி.மு.க., -அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள்தான் போட்டியிடுவர். வாக்காளர்களுக்கு, 500 முதல், 2,000 ரூபாய் வரை கொடுத்து வெற்றி பெறலாம் என, அவர்கள் நினைக்கின்றனர். மக்கள் இதை புரிந்து கொண்டு, பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உடனிருந்தார்.

