ADDED : மார் 27, 2024 04:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்ச: சின்னதாராபுரம், நேரு நகர் மின்சார அலுவலகத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகம் வரை உள்ள சாலை வளைவாக உள்ளதால், விபத்தை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் நேரு நகர் பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை, அதிக வளைவுகள் கொண்டது. இதனால் இந்த சாலையில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இதனை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

