நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்கால் கரைகளில் அதிகளவு மரங்கள் உள்ளன.
இதில் தேக்கு, புங்கன், வேம்பு, ஈட்டி மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. தற்போது மேட்டு வாய்க்கால் கரையில் பிள்ளபாளையம் பகுதியில், பழமையான ஈட்டி மரம் ஒன்று வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வழியில் விழுந்துள்ளது. மழை, காற்று காரணமாக மரம் சாய்ந்துள்ளது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகம், வாய்க்காலில் விழுந்துள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.