/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பு சுவரில் டூவீலர் மோதி ஒருவர் பலி
/
தடுப்பு சுவரில் டூவீலர் மோதி ஒருவர் பலி
ADDED : செப் 16, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், கந்தகபொடிக்காரர் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி, 55; இவர் கடந்த, 13ல், 'ஹீரோ பேஷன் புரோ' டூவீலரில், வெங்கமேடு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலர் எதிர்பாராதவிதமாக எதிரே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
அதில், தலையில் அடிப்பட்ட அக்பர் அலி, அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, அக்பர் அலியின் சகோதரர் நாசர் அலி, 65, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

