நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: திண்டுக்கல் மாவட்டம், சரளப்பட்டியை சேர்ந்தவர் விஜய் சக்-திவேல், 26; இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, சுக்காலியூர் பாலம் அருகே, இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த, அடை-யாளம் தெரியாத, 40 வயதுடைய ஆண் மீது கார் மோதியது. அதில், காயமடைந்தவர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகு-றித்து, தோரணக்கல்பட்டி வி.ஏ.ஓ., தனராஜ், 42, கொடுத்த புகார்-படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

