/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் சாலையில் வேகத்தடை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு
/
கோவில் சாலையில் வேகத்தடை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு
கோவில் சாலையில் வேகத்தடை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு
கோவில் சாலையில் வேகத்தடை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு
ADDED : செப் 17, 2024 01:17 AM
கோவில் சாலையில் வேகத்தடை
சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு
கரூர் செப். 17 -
சதாசிவ பிரமேந்திராள் கோவில் சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ஞானசேகரன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகே நெரூரில், புகழ்பெற்ற ஸ்ரீ சற்குரு சதாசிவ பிரமேந்திராள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்கள் உள்ளன. இங்கு தினமும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். கோவில் அமைத்துள்ள திருமுக்கூடலுார் செல்லும் பிரிவு சாலையில், வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். சில வாகனங்கள் அதிவேகத்தில் வரும் போது விபத்து ஏற்படுகிறது. இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலை துறையிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் சாலையில் வடபுறம், தென்புறம் என இரண்டு இடங்களிலும், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

