தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலரில் புகுந்தபாம்பால் பரபரப்பு

டூவீலரில் புகுந்தபாம்பால் பரபரப்பு

டூவீலரில் புகுந்தபாம்பால் பரபரப்பு


ADDED : ஏப் 06, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டூவீலரில் புகுந்தபாம்பால் பரபரப்பு

அரவக்குறிச்சி:டூவீலரில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.அரவக்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்த வேதமுத்து மகன் ராஜேந்திரன், 65; இவர் தன், 'ஹோண்டா சைன்' டூவீலரை, அரவக்குறிச்சி கடைவீதியில் உள்ள வணிக வளாகம் முன் நிறுத்தியிருந்தார். அப்போது, அங்கிருந்த மரத்தில் இருந்து வந்த, 'கொம்பேறி மூக்கன்' பாம்பு ஒன்று, ராஜேந்திரனின் டூவீலர் சீட்டுக்கடியில் புகுந்து பதுங்கி கொண்டது.

இதைப்பார்த்த ராஜேந்திரன், அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சீட்டுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பை நீண்ட போராட்டத்துக்கு பின் பிடித்தனர். பின், காட்டுப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us