/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் புதல்வன் திட்டம் கரூரில் தொடக்க விழா
/
தமிழ் புதல்வன் திட்டம் கரூரில் தொடக்க விழா
ADDED : ஆக 10, 2024 06:45 AM
கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் புதல்வன் திட்டம், தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், கரூர் மாவட்டத்தில், 35 கல்லுாரிகளை சேர்ந்த, 3,949 மாணவர்களுக்கு, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம், 1,000 ரூபாய் பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம்., கார்டுகளை, கலெக்டர் தங்-கவேல் வழங்கினார்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்-தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரகாசம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் வினோதினி, ஐ.ஓ.பி., உதவி மண்டல மேலாளர் மாரி, கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.

