தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு

பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு

பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு


ADDED : நவ 30, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, நவ. 30

பாம்பு தீண்டி பெண் கூலி தொழிலாளி இறந்தார்.

குளித்தலை அடுத்த பாலராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மருதாம்பாள், 58, விவசாய கூலி தொழிலாளி. கடந்த 27ம் தேதி இரவு 7:00 மணியளவில் தனது வீட்டின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு அவரை தீண்டியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒடுவந்துாரில் உள்ள தனது மகள் பிருந்தா, 30,க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட மருதம்பாளை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

அவரது மகள் பிருந்தா கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us