சேரியம்மன், பாலக்காட்டு அம்மன்கோவிலில் பங்குனி திருவிழா
சேரியம்மன், பாலக்காட்டு அம்மன்கோவிலில் பங்குனி திருவிழா
ADDED : ஏப் 09, 2025 01:29 AM
சேரியம்மன், பாலக்காட்டு அம்மன்கோவிலில் பங்குனி திருவிழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., மேட்டுப்பட்டியில் சேரியம்மன், பாலக்காட்டு அம்மன், சங்கிலி கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த, 6 இரவு கரகம் பாலித்தலுடன் துவங்கியது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, திருநங்கைகள் அம்மன் வேடம் மற்றும் கருப்பசாமி வேடமிட்டு நடனமாடி கோவிலை வந்தடைந்தனர். பின்னர், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை எடுத்து வந்தனர். பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை பக்தர்கள் கிடா வெட்டி கொண்டாடினர். மாலையில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
