ADDED : ஏப் 09, 2025 01:21 AM
கடவூர் அருகே மரபு விதை திருவிழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் சுருமான்பட்டியில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், 87ம் ஆண்டு பிறந்த தினத்தை ஒட்டி மரபு விதை திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நம்மாழ்வாரின் நினைவிடத்தில், அனைவரும் மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர். நம்மாழ்வாரின் மகள் மீனா நம்மாழ்வார், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். எங்கள் ராஜா வரவேற்றார். மருதம் குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் புண்ணிய
மூர்த்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து, இந்தாண்டுக்கான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விருது, கரூர் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும் பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பவருக்கு, கல்விக்கான விருது, திருமானுார் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை துணை இயக்குனர் காசிபிச்சைக்கு மரபு மருத்துவத்திற்கான விருது, சுற்றுச்சூழலுக்கான விருது கல்லணை இளங்கோவிற்கு வழங்கப்பட்டது.
வானகத்தின் வெற்றிமாறன் நன்றி கூறினார். இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
