தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிவிழுந்த பெண்ணால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிவிழுந்த பெண்ணால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிவிழுந்த பெண்ணால் பரபரப்பு


ADDED : மார் 25, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிவிழுந்த பெண்ணால் பரபரப்பு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, மனு கொடுக்க வந்த பெண், திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கிக்

கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி

களுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளாக, 526 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே, புத்தாம்பூரை சேர்ந்த புஷ்பலதா, 42, என்பவர் மனு கொடுக்க நின்று கொண்டிருந்தார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே போலீசார், அவருக்கு தண்ணீர் கொடுத்து, மயக்கத்தை தெளிய வைத்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், தொடர்ந்து பணி செய்ய முடியவில்லை. தனக்கு உதவி கோரி மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். பின், அவர், மனு அளிக்க சென்றார். இதனால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒன்பது பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஊன்றுகோல், திறன்பேசி, நவீன செயற்கை கால் மற்றும் மின்கல சக்கர நாற்காலி என மொத்தம் 2.17 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us