/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா ஒரு லட்சம் இருக்கைகள் அமைப்பு
/
கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா ஒரு லட்சம் இருக்கைகள் அமைப்பு
கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா ஒரு லட்சம் இருக்கைகள் அமைப்பு
கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா ஒரு லட்சம் இருக்கைகள் அமைப்பு
ADDED : செப் 10, 2025 01:10 AM
கரூர், ''கரூரில் நடக்கவுள்ள தி.மு.க., முப்பெரும் விழாவில், ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில், தி.மு.க., சார்பில் முப்பெரும் விழாவிற்கு மேடை அமைப்பு உள்பட பல்வேறு பணிகளை, கட்சி மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ஈ.வெ.ரா.பிறந்த நாள் விழா, தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா கரூரில் வரும், 17ல், நடக்கிறது. இந்த விழாவில் மக்கள் பங்கேற்பதற்காக, முதல் கட்டமாக ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கார் பார்க்கிங் உள்பட, அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி
யில் இருந்து, 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.