அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்புகரூர் அருகே வறண்ட நிலையில் தடுப்பணை
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்புகரூர் அருகே வறண்ட நிலையில் தடுப்பணை
ADDED : பிப் 15, 2025 02:06 AM
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்புகரூர் அருகே வறண்ட நிலையில் தடுப்பணை
கரூர்:அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாததால், வறண்ட நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 15 கன அடியாக குறைந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம், 67.75 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து, தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 323 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென் கரை பாசன வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
* க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.23 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
