/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பாறையில் சிறுத்தை ' போஸ் ' பார்த்த மக்கள் ஓட்டம்
/
பாறையில் சிறுத்தை ' போஸ் ' பார்த்த மக்கள் ஓட்டம்
ADDED : பிப் 08, 2024 02:03 AM

பூதப்பாண்டி,:கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதுார் -- ஆரல்வாய்மொழி ரோட்டில் பாறை மீது அமர்ந்திருந்த சிறுத்தையால், அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் பதட்டம் அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
செண்பகராமன்புதுார் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் கரிமேனி பொத்தை என்ற இடத்தில் சாஸ்தா கோவில் உள்ளது. பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இப்பகுதியில் பாறைகளும், புதர்களும் அடர்ந்து காணப்படுகின்றன.
இந்த பகுதி வழியாக நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், பாறை மீது சிறுத்தை அமர்ந்திருந்ததை பார்த்து பதற்றமடைந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் அதை மொபைலில் படம் எடுத்து வெளியிட்டனர்.
வழக்கமாக குமரி மாவட்டத்தில் சிறுத்தைகள் இதுவரை தென்படாத நிலையில், அந்தப் பகுதியில் சிறுத்தைகள் மறைந்துள்ளனவா என,வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

