/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும் தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித்ஷா பேச்சு
/
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும் தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித்ஷா பேச்சு
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும் தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித்ஷா பேச்சு
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும் தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித்ஷா பேச்சு
ADDED : ஏப் 14, 2024 07:34 AM

நாகர்கோவில் : ''தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கும் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை ஓட ஓட விரட்டிவிட்டு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என தக்கலையில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
கன்னியாகுமரி லோக்சபா பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து தக்கலையில் இருந்து மேட்டுக்கடை வரை பிரசார ரோடு ஷோ நடத்திய அமித்ஷா பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியினர் பிரதமர் மோடிக்காக சிறப்பாக களப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொண்டுசெல்ல மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஓடஓட விரட்ட வேண்டும்
தமிழில் பேசமுடியவில்லை என எனக்குவருத்தமாக இருக்கிறது. மூன்று ,நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். தி.மு.க., - அ.தி.மு.க.,கட்சிகள் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்சிகளை ஓட ஓட விரட்டிவிட்டு பா.ஜ.,-வுக்கு ஓட்டளிக்க வேண்டும். தி.மு.க., சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர்கோயில் கட்டியதையும் விமர்சித்து பேசி கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர்.
நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக் கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்து சென்றுகொண்டிருக்கிறார்.
3-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3-வது முறையாக கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சிபெறும்.
தமிழகத்தில் நான் செல்லும் இடம் எல்லாம் பா.ஜ., இந்தியா முழுமைக்கும் 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள்.
400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்ராதாகிருஷ்ணனையும் சேர்த்துதான் இருக்க வேண்டும்.விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினியை வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

