/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணி நீக்கம் செய்தவருக்கு மீண்டும் வேலை கவுன்சிலரால் தொழிலாளர்கள் போராட்டம்

ADDED : நவ 23, 2024 08:12 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சி குப்பை சேகரிக்கும் ஒப்பந்தத்தை, விதைகள் தன்னார்வலர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்த வேலையை நிர்வகிக்கும் தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், துப்புரவு பெண் தொழிலாளி ஒருவரை, கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்தார். அவர், தேசிய துப்புரவு ஆணைத்திற்கு சென்று, துப்புரவு பணியை மீண்டும் பெற்று உள்ளார்.
நேற்று அவர் பணிக்கு சென்ற போது, தி.மு.க., கவுன்சிலரின் துாண்டுதல்படி, துப்புரவு பணியாளர்கள் சிலர் நேற்று வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.
தனி நபர் ஒருவருக்காக, துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணி சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் தி.மு.க., கவுன்சிலரின் செயலால், பொது மக்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தியது.