/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் சூழ்ந்த அங்கன்வாடி சீரமைக்கும் பணி எப்போது?
/
மழைநீர் சூழ்ந்த அங்கன்வாடி சீரமைக்கும் பணி எப்போது?
மழைநீர் சூழ்ந்த அங்கன்வாடி சீரமைக்கும் பணி எப்போது?
மழைநீர் சூழ்ந்த அங்கன்வாடி சீரமைக்கும் பணி எப்போது?
ADDED : டிச 10, 2024 06:13 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தில், கடந்த 2019 -- 20ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 8.43 லட்சம் ரூபாய் செலவில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு, மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், கடந்த வாரம் பெய்த மழையால், அங்கன்வாடி கட்டடம் முன் மழைநீர் தேங்கியுள்ளது.
இதிலிருந்து நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வளாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
எனவே, அங்கன்வாடி மைய கட்டடம் முன் தேங்கும் மழைநீரை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.