/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த நல அலுவலருக்கு 'சம்மன்'
/
பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த நல அலுவலருக்கு 'சம்மன்'
பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த நல அலுவலருக்கு 'சம்மன்'
பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த நல அலுவலருக்கு 'சம்மன்'
ADDED : மார் 11, 2024 10:59 PM
சென்னை : கணவரின் இறுதிச்சடங்கிற்கு பணம் கிடைக்காமல், பார்வை மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஞானவேல். ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கடந்த பிப்., 26ம் தேதி உயிரிழந்தார்.
மாற்றுத்திறனாளிகளின் இறுதிச்சடங்கிற்கு, மாற்றுத்திறனாளி நலத்துறை வாரியத்தால், 17,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை பெறும் முயற்சியில், ஞானவேலின் மனைவியான பார்வை மாற்றுத்திறனாளி ராஜம்மாள் ஈடுபட்டார்.
ஆனால், திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உடலை அடக்கம் செய்து, இறுதிச்சடங்கு முடித்துவிட்டு, தாசில்தாரிடம் வாரிசு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் பெற்று வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனால் நண்பர்கள் வசூலித்து கொடுத்த 22,000 ரூபாயை வைத்து, இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நம் நாளிதழில் கடந்த பிப்., 28ல் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், 'திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வரும் 19ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராக 'சம்மன்' அனுப்பி உத்தரவிட்டது.
ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாவிட்டால், ஆணையம்தாமாக முடிவெடுக்கும்என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

