/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேட்டுக்குப்பம் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
/
மேட்டுக்குப்பம் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
ADDED : பிப் 13, 2024 10:14 PM

பெரும்பாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேட்டுக்குப்பம் -- பெரும்பாக்கம் சாலை 8 கி.மீ., நீளமும், 3.75 மீட்டர் அகலமும் கொண்டது. அகலம் குறைவான இச்சாலையில் எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால், இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேட்டுக்குப்பம் -- பெரும்பாக்கம் சாலை 3.30 கோடி ரூபாய் செலவில், 3.75 மீட்டர் அகலம் கொண்ட சாலை, 5.50 மீட்டர் அகலத்திற்கு 4 கி.மீ., வரை சாலை விரிவாக்கம் பணி கடந்த ஆண்டு முடிந்தது.
தற்போது இரண்டாவது கட்டமாக, மேல்கதிர்பூரில் இருந்து, மேல்ஒட்டிவாக்கம் வரையிலான 4 கி.மீ., நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணி சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதையடுத்து, இச்சாலையில் உள்ள அரசு பள்ளி மற்றும் முக்கிய சந்திப்புகளான மேட்டுக்குப்பம், மேல்ஒட்டிவாக்கம், கூத்திரமேடு உள்ளிட்ட பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு, வெள்ளை நிற வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
இதையடுத்து, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

