/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆவடி - சென்ட்ரல் தடத்தில் நாளை முதல் புதிய ரயில் சேவை
/
ஆவடி - சென்ட்ரல் தடத்தில் நாளை முதல் புதிய ரயில் சேவை
ஆவடி - சென்ட்ரல் தடத்தில் நாளை முதல் புதிய ரயில் சேவை
ஆவடி - சென்ட்ரல் தடத்தில் நாளை முதல் புதிய ரயில் சேவை
ADDED : நவ 05, 2024 07:06 AM
சென்னை : ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு நாளை முதல் புதிய ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
நெரிசல் மிக்க வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்குவது, அனைத்து மின்சார, குறுகிய பயணியர் ரயில்களை 12 பெட்டிகளாக மாற்றி இயக்க, சென்னை ரயில் கோட்ட திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, புதிய மின்சார ரயில் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், ஆவடியில் இருந்து நாளை முதல் தினமும் மாலை 6:10 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 6:55 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை கடற்கரை --- திருவண்ணாமலை இடையே இருமார்க்கமாகவும் ஒன்பது பெட்டிகள் கொண்ட 'மெமு' ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில், கூடுதலாக மூன்று பெட்டிகள் சேர்க்கப்பட்டு, 12 பெட்டிகளாக நாளை முதல் இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை -- திருவண்ணாமலை இடையே மெமு ரயில் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. மறுமார்க்காக, இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, கடற்கரை வந்தடையும் மெமு ரயில், வரும் 7ம் தேதி வரை தாம்பரம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.

