/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அத்துமீறி மதுபாட்டில் விற்பனை 'டாஸ்மாக்' ஊழியருக்கு வலை
/
அத்துமீறி மதுபாட்டில் விற்பனை 'டாஸ்மாக்' ஊழியருக்கு வலை
அத்துமீறி மதுபாட்டில் விற்பனை 'டாஸ்மாக்' ஊழியருக்கு வலை
அத்துமீறி மதுபாட்டில் விற்பனை 'டாஸ்மாக்' ஊழியருக்கு வலை
ADDED : மார் 15, 2024 09:16 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - களியனுார் சாலையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவின் ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வையாவூர் டாஸ்மாக் கடை சந்திப்பில் வந்த, 'டி.வி.எஸ்.,' இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கியபோது, தப்ப முயன்ற நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இருசக்கர வாகனத்தை பரிசோதித்ததில், டாஸ்மாக் கடையின் பெட்டியும், அதில், 50 மது பாட்டில்களும் இருந்துள்ளன.
போலீசார் விசாரணையில், திருக்காலிமேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கோபி, 40, என்பதும், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாங்கி வந்ததும் தெரியவந்தது.
மேலும், வையாவூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் தட்சிணாமூர்த்தி என்பவரிடம், 7,500 ரூபாய் கொடுத்து வாங்கி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கோபியை கைது செய்தனர். வையாவூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் தட்சிணாமூர்த்தி மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

