/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துப்பாக்கி விற்பவருடன் கொலையாளிக்கு தொடர்பு?
/
துப்பாக்கி விற்பவருடன் கொலையாளிக்கு தொடர்பு?
ADDED : பிப் 07, 2024 01:14 AM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தலையற்ற ஆண் உடலை, கடந்த டிச., 30ம் தேதி குன்றத்துார் போலீசார் மீட்டனர்.
இறந்தவர் உடலில் இருந்த ஆடை மூலம், கொலையானவர் சென்னை, நந்தம்பாக்கத்தில் தங்கி காவலாளியாக பணிபுரிந்த பூமிநாதன், 34, என தெரிந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில், குன்றத்துார் அடுத்த சிறுகளத்துாரைச் சேர்ந்த திலீப்குமார், 34, என்பவர், தன் நண்பர் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து பூமிநாதனை சுட்டுக் கொன்று கை, கால், தலை, உடலை வெட்டி, ஏரியில் வீசியது தெரிந்தது.
திலீப்குமார், விக்னேஷை, கடந்த 3ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திலீப்குமார், ராஜஸ்தானில் இருந்து துப்பாக்கி வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
எனவே, வடமாநிலத்தில் இருந்து கள்ள சந்தையில் துப்பாக்கி வாங்கி வந்து விற்பனை செய்யும் கும்பலுடன், திலீப்குமாருக்கு தொடர்பு உள்ளதா அல்லது தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளாரா என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், திலீப்குமாரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

