ADDED : மே 08, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார், நகலகம் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் மீனாட்சி, 40.
இவர், நேற்று மதியம், கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், மீனாட்சியின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, தங்க செயினை பறிக்க முயன்றார்.
மீனாட்சி கூச்சலிட்டதை கேட்டு, அப்பகுதியில் இருந்தோர் அந்த மர்ம நபரை பிடித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சத்யா, 45, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

